பெட்ரோல் பங்க் உரிமையாளர் மீது தாக்குதல்: நால்வர் கைது
பெட்ரோல் பங்க் உரிமையாளர் மீது தாக்குதல்: நால்வர் கைது
ADDED : நவ 24, 2026 08:53 PM

திண்டுக்கல்:
திண்டுக்கல் பாரதிபுரத்தை சேர்ந்தவர் சவுகத் அலி 60, பெட்ரோல் பங்க் நடத்துகிறார். இவருக்கு சொந்தமான தோட்டம் சிறுமலையில் உள்ளது. நேற்று (நவ.,23) தோட்டத்துக்கு சென்று விட்டு அவரது மகன் சையது அராபத், உறவினர் முகமது உமர்பாரூக் ஆகியோருடன் காரில் திண்டுக்கல் திரும்பினார்.
சிறுமலை ரோட்டில் முன்னால் சென்ற காரை முந்தினார். இதனால் ஆத்திரம் அடைந்தவர்கள் திண்டுக்கல் ஒத்தக்கண் பாலம் அருகே சவுகத் அலியின் காரை பின்னால் மோதி நிறுத்தினர். பின்னர் காரில் இருந்து இறங்கிய கும்பல் இரும்புக் கம்பியால் தாக்கினர். காயமடைந்த சவுகத்அலி, அவரது மகன் உள்ளிட்ட மூவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
புகாரில் 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து தெற்கு இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் விசாரணை நடத்தினார். தொடர்ந்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஆத்துார் தி.மு.க., நிர்வாகி முருகேசன் மகன்களான தயாநிதி 21, உதயநிதி 20, அவர்களது நண்பரான லோகேஷ் 23, விக்னேஷ் 20, ஆகிய நால்வரை கைது செய்தனர்.
