தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/மறியலில் ஈடுபட முயற்சி

மறியலில் ஈடுபட முயற்சி

மறியலில் ஈடுபட முயற்சி


ADDED : ஜன 11, 2024 05:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 11, 2024 05:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி, : பழநி நகராட்சி, ஒன்றாவது வார்டு காமராஜர் நகரில் குடிநீர் குழாய்கள் இணைப்பை துண்டித்ததால் பொதுமக்கள் மறியலில் ஈடுபட முயன்றனர். பழநி நகராட்சி, 1வது வார்டு காமராஜர் நகரில் குடிநீர் குழாய்கள் நகராட்சி மூலம் இணைப்பை துண்டித்தனர். நகராட்சி கவுன்சிலர் ராசு தலைமையில் பொதுமக்கள் புது பழைய தாராபுரம் ரோடு, கோவை ரோடு சந்திப்பில் திரண்டனர்.

அப்போது குடிநீர் இணைப்பை துண்டித்தால் மாற்றி ஏற்பாடு செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்து மறியலில் ஈடுபட முயன்றனர். போலீசார் நகராட்சி அலுவலர்கள் பேச்சுவார்த்தை பின் கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us