ADDED : ஆக 06, 2026 12:39 AM

அ நிறம் | அளவு
திண்டுக்கல்: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 15 ஆண்டுகளாக ஒரே பதவியில் பணிபுரிந்து வரும் உதவி பொறியாளர்கள் அனைவரையும் உதவி செயற்பொறியாளர்களாக தரம் உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாவட்ட கலெக்டர் அலுவலக வாசலில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அருண்பிரசாத், மாவட்ட தலைவர் மகுடபதி, மாநில துணைத்தலைவர் வீரகடம்பகோபு ஆகியோர் பேசினர். வட்டார பொருளாளர் செல்வக்குமார் நன்றி தெரிவித்தார்.
