ADDED : ஆக 27, 2026 07:12 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல், ஆக.28
டிசம்பர் 3 இயக்கம் சார்பில் வருவாய்த்துறை வழங்கும் மாதாந்திர உதவித்தொகையை ரூ.3 ஆயிரமாகவும், மாற்றுத்திறனாளி நலத்துறை வழங்கும் உதவித்தொகையை ரூ.4 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்க வேண்டும், அரசு பஸ்களில் மாற்றுத்திறனாளிகள் கட்டணமில்லா பயணம், இருக்கை வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாநில தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலக நுழைவாயில் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் மோகன்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் முருகன், பொருளாளர் தனலட்சுமி, அவைத்தலைவர் ஆண்டி, நிர்வாகிகள் பலர் பங்கேற்று கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
