/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வழக்கறிஞர் மீது தாக்குதல்; மறியல்
/
வழக்கறிஞர் மீது தாக்குதல்; மறியல்
ADDED : பிப் 18, 2025 05:28 AM
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் வழக்கறிஞரை தாக்கிய அமைச்சர் உதவியாளர், தி.மு.க.,வினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கறிஞர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் சுப்ராம்பட்டரையை சேர்ந்தவர் வழக்கறிஞர் உதயகுமார்40. இவர் அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு நிர்வாகியாக உள்ளார். திண்டுக்கல் பழைய நீதிமன்றம் அருகே செயல்படும் பள்ளி அருகில் ரோட்டோரத்தில் நின்ற மரம் விழுந்தது.
இதுவரை அகற்றவில்லை. மரத்தை அகற்றக்கோரி தி.மு.க., மாவட்ட அலுவலகத்திலிருந்த அமைச்சர் பெரியசாமியை சந்திக்க சென்றார்.
அப்போது அமைச்சரின் பாதுகாப்பு போலீஸ், தி.மு.க.,வினர் பேச வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் உதயகுமாரை தாக்கினர்.
இதையறிந்த திண்டுக்கல் வழக்கறிஞர்கள் மாவட்ட தி.மு.க.,அலுவலகம் முன் மறியலில் ஈடுபட்டனர்.
போலீசார் பேச்சுவார்த்தை நடத்த அங்கிருந்த புறப்பட்ட வழக்கறிஞர்கள் வடக்கு போலீஸ் ஸ்டேஷன், மருத்துவமனை சந்திப்பு முன் மறியலில் ஈடுபட்டனர்.

