/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆடி முடிந்ததால் ஏலங்களை தவிர்த்த ஏலதாரர்கள்
/
ஆடி முடிந்ததால் ஏலங்களை தவிர்த்த ஏலதாரர்கள்
ADDED : ஆக 21, 2025 11:55 PM
வடமதுரை: அய்யலுார் வண்டிகருப்பண சுவாமி கோயிலில் எறிகாசு, சிதறு தேங்காய் சேகரம், ரோட்டில் தட்டு எடுத்து சேகரிக்கும் காணிக்கை, வாகன பாதுகாப்பு வரி வசூல் என 4 வகைக்கு வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஏலம் நடந்தது.
ஹிந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் அன்னக்கொடி நடத்தினார். ஆய்வாளர் திவ்யலட்சுமி, செயல் அலுவலர் முத்துலட்சுமி முன்னிலை வகித்தனர்.
நெடுஞ்சாலையில் தட்டு எடுத்து காணிக்கை சேகரிப்பிற்கு புதிதாக தனி ஏலம் அறிவித்த பின்னரும் எறிகாசு சேகரிப்பிற்கான குறைந்தபட்ச ஏலத்தொகையை குறைக்காமல் ரூ.13 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இது அதிகம் என கூறி ஏலத்திற்கு டெபாசிட் கட்டிய ஏலதாரர்கள் யாரும் ஏலம் கேட்கவில்லை.
அதிகபட்ச வருமானம் கிடைக்கும் ஆடி மாதம் நிறைவடைந்த நிலையில் அடுத்த 10 மாதங்களுக்கு குறைந்த வருவாயே கிடைக்கும் என கூறி மற்ற ஏலங்களையும் யாரும் எடுக்காததால் 4 வகை ஏலங்களும் ஒத்தி வைக்கப்பட்டது.

