/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தாண்டிக்குடி மலைப்பகுதியில் பூத்துக்குலுங்கும் அவகடா கூடுதல் மகசூலை எதிர்பார்க்கும் விவசாயிகள்

ADDED : மார் 05, 2026 04:57 AM

தாண்டிக்குடி: தாண்டிக்குடி மலைப்பகுதியில் அவகடா மரங்களில் பூக்கள் அதிகளவு பூத்துள்ளது.
போதுமான இடைவெளியில் மழை பெய்தால் மகசூல் அதிகரிக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
தாண்டிக்குடி கீழ்மலையில் 30 ஆயிரம் ஏக்கரில் காபி சாகுபடி செய்யப்படுகிறது. ஊடுபயிராக அவகடா மரங்கள் உள்ளன. இவ்விவசாயத்தில் துவக்கத்தில் விவசாயிகள் ஆர்வம் காட்டாத நிலை இருந்தது.
அவகடா மூலம் மதிப்புக் கூட்டுப் பொருட்களான ஐஸ் கிரீம், பேசியல் கிரீம் தயாரிப்பு, நுண்ணூட்டச் சத்து, புரோட்டீன் அவகடா (வெண்ணெய்) பழங்களில் நிறைந்துள்ளதால் மார்க்கெட்டில் தேவை அதிகரித்தது. விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைத்து பொருளாதார ரீதியாக கைக்கொடுத்தது. இதனால் மானாவாரி சாகுபடியான அவகடா பரப்பு அதிகரித்தது.
ஆனால் சில ஆண்டுகளாக சீதோஷ்ண நிலை மாற்றத்தால் மகசூல் பாதியாக சரிந்தது. 2025ல் வடகிழக்கு பருவமழை சரிவர பெய்யாத சூழலில் மகசூல் மேலும் பாதிக்கும் அபாயம் இருந்தது. தற்போது மலைப்பகுதி முழுமையும் அவகடா மரங்களில் பூக்கள் அதிகளவு பூத்துள்ளது. ஆகஸ்டில் அவகடா காய்கள் பறிக்க தயாராகி சீசன் துவங்கும்.
தற்போதைய பூக்கள் காயாக போதுமான இடைவெளியில் மழை பெய்யும் சூழலில் மகசூல் அதிகரிக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.