ADDED : ஜூலை 11, 2025 03:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைரோடு: பள்ளபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2024- --25 ம் ஆண்டிற்கான அண்ணா தலைமைத்துவ விருது , ரூ. 10 லட்சத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் வழங்கி பாராட்டினார்.
இப்பள்ளியில் கல்வி, விளையாட்டு, மாணவர் மேம்பாடு, பள்ளி கட்டமைப்பு, பள்ளி மேலாண்மை குழு செயல்பாடு உள்ளிட்ட அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்காக அரசு சார்பில் இந்த விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற தலைமையாசிர் ஆனந்தகுமாரியை நிலக்கோட்டை தெற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் மணிகண்டன், பள்ளி நிர்வாக குழு பாராட்டினர். மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.