ADDED : அக் 31, 2024 02:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அக் ஷயா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் தீயணைப்பு,பாதுகாப்புத் துறையினரால் மாணவர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி கணேசன் பேசினார். ஒட்டன்சத்திரம் தீயணைப்பு துறை அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முறைகள், முதலுதவி செய்தல், பட்டாசுகளை வெடிக்கும் முறை உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான செயல் திட்ட வழிமுறைகளை மாணவர்கள் முன் நிகழ்த்தி காட்டினர். பள்ளி முதல்வர் சவும்யா பங்கேற்றார்.

