ADDED : நவ 28, 2026 01:59 AM
அ நிறம் | அளவு
பண்ணைக்காடு: பண்ணைக்காடு பேரூராட்சியில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
செயல் அலுவலர் ரமேஷ் தலைமை வகித்தார். தலைவர் முருகேஷ்வரி, துணைத் தலைவர் லதா, அனைத்து வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
முகாமில் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம், சேதமடைந்த மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை சீர்செய்தல், புதிதாக அமைத்தல், அதன் பயன்கள் குறித்து அரசு பள்ளி மாணவர்கள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது.
