UPDATED : ஜூலை 23, 2026 08:08 PM
ADDED : ஜூலை 23, 2026 08:01 PM
அ நிறம் | அளவு
நத்தம்:நத்தம் அரசு திருமண மண்டபத்தில் மருந்து வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. சங்க தாலுகா தலைவர் கென்னடி தலைமை வகித்தார். செயலாளர் சின்னச்சாமி, பொருளாளர் மணிகண்டன், மாவட்ட துணைத்தலைவர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட மருந்து ஆய்வாளர்கள் மகேஸ்வரன், ஸ்வர்ணலதா பங்கேற்று மருந்துகள், அழகுசாதன சட்ட திருத்தப்பட்ட விதிகள், கருக்கலைப்பு, வலி மாத்திரைகள் குறித்து விளக்கினர்.
துணைச்செயலாளர் அப்துல்ஹக், நத்தம், செந்துறை, சாணார்பட்டி பகுதிகளை சேர்ந்த மருத்து வணிகர்கள் பலர் பங்கேற்றனர்.
