UPDATED : செப் 19, 2026 06:15 PM
ADDED : செப் 19, 2026 05:03 PM
அ நிறம் | அளவு
வேடசந்துார்:அமைதி அறக்கட்டளை சார்பில் பாலின பாகுபாடு இல்லாத சமூகநீதிக்கான பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு கூட்டம் உசிலம்பட்டியில் நடந்தது.
அறக்கட்டளை தலைவர் ரூபபாலன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் நதியா வரவேற்றார். அறக்கட்டளை மேலாளர் சீனிவாசன் பாலின பாகுபாடு, வன்முறை தடுப்பு குறித்தும், பயிற்சியாளர் பவித்ரா போக்சோ சட்டம் குறித்தும் எடுத்துரைத்தனர். ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.
