ADDED : ஏப் 08, 2026 08:36 PM
அ நிறம் | அளவு
பழநி:பழநியாண்டவர் கலை பண்பாட்டு கல்லுாரி சார்பில் தேர்தலில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவு செய்வதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
தேர்தல் நடத்தும் அலுவலர் கண்ணன் துவங்கி வைத்தார். ஊர்வலம் திண்டுக்கல் ரோடு வழியாக பயணியர் விடுதி வரை சென்று மீண்டும் கல்லுாரியில் முடிந்தது. தாசில்தார் நவநீதகிருஷ்ணன், கல்லுாரி முதல்வர் ரவிசங்கர், மாணவர்கள் பங்கேற்றனர்.
