ADDED : ஆக 13, 2026 04:11 PM
அ நிறம் | அளவு
எரியோடு, ஆக.14-
தண்ணீர்பந்தம்பட்டி அரசு கலை அறிவியல் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்ற போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் எரியோட்டில் நடந்தது. கல்லுாரி முதல்வர் சுமதி துவக்கி வைத்தார்.
திண்டுக்கல் ரோடு, கரூர் ரோடு, அய்யலுார் ரோடு வரை ஊர்வலம் சென்றது. இன்ஸ்பெக்டர் வினோதா, எஸ்.ஐ.,க்கள் ஜெய்கணேஷ், பாலசுப்பிரமணி, பேராசிரியர்கள் பங்கேற்றனர். போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்த பதாகைகளை ஏந்தி மாணவர்கள் கோஷமிட்டபடி சென்றனர்.
