ADDED : ஆக 27, 2026 06:33 PM
அ நிறம் | அளவு
வேடசந்துார், ஆக.28
வேடசந்துார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட பள்ளி கல்வித்துறை, நாட்டு நலப்பணி திட்ட முகாம் சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. தலைமை ஆசிரியை கண்மணி தலைமை வகித்தார். ஊர்வலம் பஸ் ஸ்டாண்ட், ஆத்துமேடு, முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது.
ஊர்வலத்தில் பங்கேற்ற மாணவர்கள் போதைப் பொருள், போதைப் பழக்கங்களுக்கு எதிராக செயல்படுவேன். எனது நண்பர்கள், குடும்பத்தினர், சமூகத்தில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவேன் என உறுதிமொழி ஏற்றனர்.
போக்குவரத்து எஸ்.ஐ., சந்திரசேகர், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
