ADDED : நவ 19, 2026 05:09 PM
அ நிறம் | அளவு
வடமதுரை:
அய்யலுார் காக்காயன்பட்டியில் இசை நிறுவனம் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஆலோசகர் சின்னையா தலைமை வகித்தார். வளமைய தலைவர் ராமன், செயலாளர் மச்சக்காளை முன்னிலை வகித்தனர். திட்ட அலுவலர் வீரவேல் வரவேற்றார்.
சுற்றுச்சூழலை காப்பதன் அவசியம், பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். பின்னர் கிராமத்தில் ஆங்காங்கே சிதறிக் கிடந்த பிளாஸ்டிக் பைகள், பொருட்களை அகற்றினர். இனி பிளாஸ்டிக் கழிவுகளை குப்பைத் தொட்டிகளில் முறையாகச் சேர்ப்போம் என உறுதிமொழி ஏற்றனர்.
