ADDED : பிப் 01, 2026 06:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: அய்யலுார் ஆர்.வி.எஸ்., குமரன் கலை அறிவியல் கல்லுாரியில் தடய அறிவியல், குற்றவியல் துறை சார்பில், 'நவீன உலகில் இணைய பாதுகாப்பு' என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
முதல்வர் திருமாறன் தலைமை வகித்தார். மாணவி அர்ச்சனா வரவேற்றார்.
மாணவர்களது கேள்விகளுக்கு திண்டுக்கல் மாவட்ட சைபர் குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வராஜ், எஸ்.ஐ., லாய்டு சிங் விளக்கம் தந்தனர். மாணவர் சிரஞ்சீவி நன்றி தெரிவித்தார்.

