/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வீடுகள், தொழில் நிறுவனங்களில் ஆயுத பூஜை கொண்டாட்டம்
/
வீடுகள், தொழில் நிறுவனங்களில் ஆயுத பூஜை கொண்டாட்டம்
வீடுகள், தொழில் நிறுவனங்களில் ஆயுத பூஜை கொண்டாட்டம்
வீடுகள், தொழில் நிறுவனங்களில் ஆயுத பூஜை கொண்டாட்டம்
ADDED : அக் 02, 2025 03:14 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் ஆயுத பூஜையை பொதுமக்கள் கோயில்கள், வீடுகள், தொழில்நிறுவனங்களில் உற்சாகமாக கொண்டாடினர்.
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையன்று, கல்விக்கான புத்தகம், நோட்டு உள்பட தொழில் நிறுவனங்களில் எந்திரங்களுக்கு பூஜை செய்து வழிபாடு நடத்துவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆயுதபூஜை வழக்கமான உற்சாகத்துடன் நேற்று கொண்டாடப்பட்டது.
இதற்கான பொருட்களை வாங்குவதற்காக திருச்சி ரோடு, கரூர் ரோடு, உழவர் சந்தை, ரவுண்ட் ரோடு, காட்டாஸ்பத்திரி சந்திப்பு, ஆர்.எம்.காலனி, மணிக்கூண்டு, பஸ் ஸ்டாண்ட் பகுதிகள் என தற்காலிகமாக ரோட்டோரங்களில் அமைக்கப்பட்ட கடைகளில் விற்பனை ஜோராக நடந்தது.
ஒரு படி பொரி ரூ.20 க்கு, வாழைப்பழம் ஒரு சீப் ரூ.50, பன்னீர் திராட்சை கிலோ ரூ.90, ஆப்பிள் ரூ.120 முதல் ரூ.200, மாதுளை ரூ. 150 முதல் ரூ.220, கதம்பம் ரூ.20, வாழை கன்று ஒரு ஜோடி ரூ.50, மா இலை ரூ.15, வாழை இலை ரூ.10க்கும் விற்பனையானது. இதேபோல் ஒரு தேங்காய் ரூ.40, திருஷ்டி பூசணி சிறியது ரூ.30, எலுமிச்சம்பழம் ரூ.6 க்கு விற்பனையானது.
வழிபாடு காலையில் தொழில் நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் பொருட்கள், வாகனங்கள் உள்ளிட்டவற்றிற்கு மாலைஅணிவித்து வழிபட்டனர். மாலையில், ஒர்க் ஷாப், கிளினிக், தீயணைப்பு நிலையம், போலீஸ் ஸ்டேஷன்களில்சக்கரை பொங்கல், அவல், பொரி, கடலை, சுண்டல், பழங்கள் உள்ளிட்டவற்றை படைத்து அதை ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கினர்.
அதேபோல், ஆட்டோ, கார், லாரி ஸ்டாண்டுகளில் வாகனங்ளுக்கு வாழைக்கன்றுகள் கட்டி, மாலை அணிவித்து கோயில்களுக்கு எடுத்துச் சென்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில், 108 விநாயகர் கோயில், கோட்டை மாரியம்மன் கோயில், வெள்ளை விநாயகர், சித்தி விநாயகர், ரயிலடி விநாயகர், என்.ஜி.ஓ.,காலனி விநாயகர் என பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.
நேற்று முன்தினம் மாலை முதலே வாட்டர் சர்வீஸ் செய்யும் கடைகளில் டூவீலர்கள், கார்கள் வைத்திருப்போர் குவிந்தனர்.
பலர் வீடுகளிலேயே கழுவிக் கொண்டாலும் பெரும்பாலோனோர் கடைக்கு வந்திருந்ததை பார்க்க முடிந்தது.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், 108 ஆம்புலன்ஸில் பணிபுரியக்கூடிய செவிலியர்கள், ஓட்டுநர்கள் வாகனம், ஸ்ட்ரெச்சர், ஸ்டெதஸ்கோப், போன்ற உபகரணங்களை சுத்தம் செய்து, பொட்டு வைத்து தேங்காய் பழம் உடைத்து இறைவனை வேண்டி வழிபாடு செய்தனர். சிறுமலை வனச்சரகத்தில் வனச்சரக அலுவலர் பாஸ்கரன் தலைமையில் ஆயுதங்கள், வாகனங்களுக்கு பூஜை செய்யப் பட்டது.