ADDED : செப் 21, 2026 01:25 AM
திண்டுக்கல்: தேசிய மருந்து பாதுகாப்பு வாரத்தையொட்டி திண்டுக்கல் மாவட்ட ஆயுஷ் மருந்து பாதுகாப்பு மையம், அரசு மருத்துவக் கல்லுாரி மருந்தியல் துறை சார்பில் மருத்துவ மாணவர்களுக்கான ஆயுஷ் மருந்து விழிப்புணர்வு கருத்தரங்கம் கல்லுாரியின் விரிவுரை அரங்கில் நடந்தது.
மருந்தியல் துறைத்தலைவர் ஜெயப்பிரியா தலைமை வகித்தார். மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் சிவக்குமார், ஆயுஷ் மருந்து பாதுகாப்புத் துறை திட்ட ஒருங்கிணைப் பாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் ஆயுஷ் மருந்துகளுக்கு பாதுகாப்பு துறையின் முக்கியத்துவம், போலி மருந்துகள், விளம்பரங்கள், வைத்தியர்களை கண்டறிதல் ஆகியன குறித்து விளக்கம் அளித்தனர்.
இளநிலை ஆராய்ச்சியாளர் பாலமுருகன் நவீன மருத்துவத்துடன் ஆயுஷ் மருத்துவத்தையும் தகுந்த இடைவெளியில் எடுத்துக்கொண்டு முழுமையான பயனடைவது குறித்து விளக்கினார். 150க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் பங்கேற்றனர். மருத்துவக் கல்லுாரி பேராசிரியைகள், மாணவர்கள் ஒருங்கிணைத்தனர்.
