/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பூக்குழி இறங்கிய ஐயப்ப பக்தர்கள்
/
பூக்குழி இறங்கிய ஐயப்ப பக்தர்கள்
ADDED : ஜன 05, 2026 05:54 AM

கன்னிவாடி: தருமத்துப்பட்டியில் விரதமிருந்த ஐயப்ப பக்தர்கள் நேற்று பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தர்மத்துப்பட்டி தர்மசாஸ்தா ஐயப்ப பக்தர்கள் குழுவினர் ஆண்டுதோறும் மாலை அணிந்து சபரிமலை செல்கின்றனர். நேற்று பூக்குழி இறங்குதல் விழா நடத்தினர். இதற்காக வடக்குத் தெரு மகா காளியம்மன் கோயில் முன், நேற்று காலை அக்னி குண்டம் வளர்க்கப் பட்டது.
குருசாமிகள் கணேசன், முருகேசன் தலைமையிலான குழுவினர் கிராமக் கோயிலுக்கு ஊர்வலமாக வந்து அபிஷேக, ஆராதனைகள் நடத்தினர். பின்னர் கிராம முக்கியஸ்தர்கள் அழைப்பு நடந்தது. சிறப்பு பூஜைகளுக்கு பின் வரிசையாக நின்று இருந்த பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பின் அன்னதானம் பொது மக்கள், பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

