UPDATED : ஆக 29, 2026 05:53 PM
ADDED : ஆக 29, 2026 05:32 PM
அ நிறம் | அளவு
பட்டிவீரன்பட்டி:அய்யம்பாளையம் பகுதியில் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது.
இங்கு யானை வாகனத்தில் சுவாமி அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். இக்கோயிலில் வருடாபிஷேகம் முன்னிட்டு ஐயப்பனுக்கு தேன், சந்தனம், பால், பஞ்சாமிர்தம், குங்குமம், விபூதி உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
