நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எரியோடு: எரியோடு நல்லமநாயக்கன்பட்டி காளியம்மன் கோயில் முன்பு ஐயப்பன் பக்தர்கள் குழுவினரின் ஆழி பூஜை விழா நடந்தது.
சிறுவயது 7 பெண் குழந்தைகளை சப்த கன்னிமார் தெய்வங்களாக பாவித்து அவர்கள் நெய் விளக்கு கையில் ஏந்தியவாறு மேளதாளம் முழங்க கரகம் ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் காளியம்மன் கோயில் முன்பு ஆழி வளர்க்கப்பட்டு ஐயப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

