/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பகுஜன் சமாஜ் செயற்குழு கூட்டம்
/
பகுஜன் சமாஜ் செயற்குழு கூட்டம்
ADDED : ஜன 26, 2026 05:25 AM
திண்டுக்கல்: பகுஜன் சமாஜ் கட்சியின் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் மாநகரில் உள்ள சத்துணவு கூடத்தில் நடந்தது.
கிழக்கு மாவட்டத் தலைவர் ஜான்கென்னடி தலைமை வகித்தார்.
துணைத் தலைவர் ஆண்டிச்சாமி, பொதுச் செயலாளர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ரோஜாமணி, பொருளாளர் டான் ஆலிவர், கிழக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பென்ஹர் பங்கேற்றனர்.
திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மனோகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். 2026 சட்டசபை தேர்தல் பணிகளை துவக்கி, வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும்.
நத்தம், திண்டுக்கல் சட்டசபைத் தொகுதி பொறுப்பாளர்களை சேர்த்து, பூத் கமிட்டிகளை அமைக்க வேண்டும்.
ஜன.31ல் மறைந்த தலைவர் ஆம்ஸ்ட்ராங் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும்.
கட்சியின் யானை சின்னத்தை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

