தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பேனர் செய்தி... ––– ஓய்வு கொடுக்கலாமே மாவட்டத்தில் காலாவதியான அரசு பஸ்களுக்கு... பழுதாகி நடுவழியில் நிற்பதால் பயணிகள் அவதி

பேனர் செய்தி... ––– ஓய்வு கொடுக்கலாமே மாவட்டத்தில் காலாவதியான அரசு பஸ்களுக்கு... பழுதாகி நடுவழியில் நிற்பதால் பயணிகள் அவதி

பேனர் செய்தி... ––– ஓய்வு கொடுக்கலாமே மாவட்டத்தில் காலாவதியான அரசு பஸ்களுக்கு... பழுதாகி நடுவழியில் நிற்பதால் பயணிகள் அவதி


ADDED : செப் 25, 2026 07:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 07:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒட்டன்சத்திரம், செப்.26-

திண்டுக்கல் மாவட்டத்தில் பல அரசு பஸ்கள் காலாவதியான பிறகும் தொடர்ந்து இயக்கப்படுகின்றன. இதனால் பஸ்கள் அடிக்கடி பழுதாகி நடுவழியில் நிற்பதும், பயணிகள் காத்திருந்து அவதிக்குள்ளாவதும் தொடர்கிறது.

மாவட்டத்தில் அரசு விரைவுப் பஸ்கள், டவுன் பஸ்கள், வெளி மாநிலங்களுக்கு தமிழ்நாடு அரசு விரைவுப் பஸ்கள் என இயக்கப்படுகின்றன. இவற்றில் பல பஸ்கள் காலாவதியான நிலையில் தொடர்ந்து இயக்கப்படுவதால் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. இதனால் குறிப்பிட்ட நேரத்தில் வெளியூர் சென்றடையலாம் என்ற எண்ணத்தில் பயணிப்போர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

நடுவழியில் பழுதாகி நிற்கும் பஸ் பயணிகளை அடுத்தடுத்து வரும் பஸ்களில் ஏற்றி விடுகின்றனர். அந்த பஸ்களிலும் உட்காருவதற்கு இடம் கிடைக்காது. நின்று கொண்டே தான் பயணிக்க வேண்டி இருக்கிறது. இதனால் குடும்பத்துடன் பயணிப்பவர்கள் அவதிப்படுவது தொடர்கிறது.

சமீபத்தில் வடமதுரை வெள்ளமடை பகுதியில் அரசு டவுன் பஸ்சின் அச்சு முறிந்து கம்பிவேலியில் மோதி நின்றது. நத்தம் பகுதியில் மழை பெய்தபோது சென்ற அரசு பஸ்ஸின் கூரை ஒழுகியதால் பஸ்ஸிற்கு உள்ளேயே குடைபிடித்து செல்லும் நிலை பயணிகளுக்கு ஏற்பட்டது.

இதற்கு அடுத்தபடியாக பழுதடைந்த சீட்டுகள், கண்ணாடி இல்லாத ஜன்னல்கள், கண்ணாடிகள் இருந்தும் நகர்த்த முடியாத நிலை, மண் குவியல், குப்பை குவியல், பெயர்ந்து விழும் நிலையில் தகரங்கள், மழைக்காலத்தில் கூரை ஒழுகுதல் என பஸ்களில் இருக்கும் குறைகள் ஏராளம்.

அரசு டவுன் பஸ்களில் சுத்தத்தை தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய நிலை உள்ளது. பஸ்களின் உட்புறத்தில் தினந்தோறும் கூட்டி சுத்தம் செய்வது கிடையாது. முதல் நாள் எந்த நிலையில் பஸ் நிறுத்தப்படுகிறதோ அதே நிலையில் தான் மறுநாளும் இயக்கப்படுகிறது.

பழுதான பாகங்களை அவ்வப்போது மாற்றாமல் விடுவதால் நடுவழியில் பஸ்கள் பழுதாகி நிற்பது அடிக்கடி நடக்கிறது. இதனால் பயணிகள் மிகவும் அவதிக்கு உள்ளாகின்றனர். புதிதாக வரும் பஸ்களும் தொடர் பராமரிப்பு இன்மையால் சிறிது நாட்களிலேயே பழைய பஸ் போல் ஆகிவிடுகிறது.

பஸ் ஜன்னல் கண்ணாடிகளை இயக்கும் வகையில் பழுதுகளை நீக்கி சரி செய்ய வேண்டும். பயணிகள் நலனில் அக்கறை கொண்டு அரசு பஸ்களை முறையாக பராமரிக்க கூடுதல் தொழிலாளர்களை நியமிக்க வேண்டும். தினமும் பஸ்களை கூட்டி சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் பஸ்களின் உட்புறம் சுகாதார சூழல் ஏற்படுத்தப்படும். பஸ்கள் ஓடினால் போதும் என்றில்லாமல் பயணிகளுக்கு உரிய வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us