ADDED : ஏப் 24, 2025 06:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநியில் அகில பாரத வழக்கறிஞர் சங்கம் தென் தமிழ்நாட்டின் செயற்குழு கூட்டம் மாநிலத் தலைவர் ராஜேஷ் சரவணன் தலைமையில் நடைபெற்றது. வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர். நீதித்துறையிலும் நீதிபதிகளின் நியமனத்திலும் வெளிப்படை தன்மையை உறுதி செய்ய வேண்டும். புதிய சட்ட திருத்தங்களை கொண்டு வரவேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மாநில பொருளாளர் அழகுராம் ஜோதி, தென்பாரத அமைப்பாளர் அனிருத்கர்கா, மாநில மகளிர் அணி அமைப்பாளர் சபிதா, மாநில செயலாளர் எட்டீஸ்வரன் கலந்து கொண்டனர்.

