தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/சிறுமலையில் அடிப்படை வசதிகள் ; -கே.கே.செல்வகுமார் வாக்குறுதி

சிறுமலையில் அடிப்படை வசதிகள் ; -கே.கே.செல்வகுமார் வாக்குறுதி

சிறுமலையில் அடிப்படை வசதிகள் ; -கே.கே.செல்வகுமார் வாக்குறுதி


ADDED : ஏப் 08, 2026 08:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 08, 2026 08:41 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சாணார்பட்டி:''சிறுமலையில் அனைத்து கிராம பகுதிகளுக்கும் சாலை வசதி, மின்சார வசதி,அடிப்படை வசதிகள் செய்து தருவேன்'' என நத்தம் தொகுதி தி.மு.க., கூட்டணி தமிழர் தேசம் வேட்பாளர் கே.கே.செல்வகுமார் பேசினார்.

நத்தம் தொகுதியில் தி.மு.க., கூட்டணி சார்பில் தமிழர் தேசம் நிறுவனர் கே.கே. செல்வகுமார் வேட்பாளராக போட்டியிடுகிறார்.அவர் நேற்று சிறுமலை, அண்ணாநகர், பழையூர், புதுார்,அகஸ்தியர்புரம், தென்மலை, தாழக்கடை, தோமையார்புரம், ஏ.வெள்ளோடு,நரசிங்கபுரம்,கல்லுப்பட்டி,கரட்டழகன்பட்டி, சிறுநாயக்கன்பட்டி உள்ளிட்ட 24 கிராமங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.சிறுமலையில் கே.கே.செல்வகுமார் பேசியதாவது: மகளிர் உரிமைத்தொகை யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வங்கி கணக்கில் ரூ 5000 வரவு வைத்து தமிழக முதல்வர் இன்ப அதிர்ச்சியை கொடுத்தார்.

நத்தத்தில் அரசு கலைக் கல்லுாரியை தொடங்கி ஏழை மாணவர்களின் உயர்கல்வி கனவை நினைவாக்கியவர் ஸ்டாலின்.

தற்போது இந்த கல்லுாரியில் 284 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.கல்லுாரி படிப்பை முடித்த பிறகு அவர்கள் அரசுப் போட்டித் தேர்வுகளில் கலந்துகொண்டு அரசு பணிக்கு செல்ல வேண்டும் என்பதற்காக இலவச அறிவு சார்ந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.சிறுமலையில் தங்கு தடையின்றி வாகனங்களில் சென்றுவர அனைத்து பகுதிகளிலும் சாலை , மின்சார வசதி ஏற்படுத்தி தரப்படும் என்றார். முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டி அம்பலம், தி.மு.க., மாவட்ட பொருளாளர் விஜயன், நத்தம் தொகுதிபொறுப்பாளர் ஈரோடு சாமி, ஒன்றிய செயலாளர்கள் வெள்ளிமலை, ரத்தினகுமார்,ஜெயராமன், வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us