ADDED : மார் 29, 2025 05:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை அருகே மல்லப்புரத்தை சேர்ந்த அமுதா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: மல்லப்புரத்தில் பொதுக் கழிப்பறை பராமரிப்பில்லாததால் சேதமடைந்துள்ளது. மக்கள் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல சாக்கடை வசதி இல்லை.
ஒரே இடத்தில் கழிவு நீர் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. கழிப்பறையை சீரமைக்க வேண்டும். குடிநீர், மின்விளக்கு, சாக்கடை வசதியை நிறைவேற்ற வலியுறுத்தி கலெக்டர், குஜிலியம்பாறை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு மனு அனுப்பினோம். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு: மனுவை அதிகாரிகள் 12 வாரங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.