ADDED : ஆக 16, 2025 09:24 PM

பழனி:பழனி முருகன் கோவில் பக்தர்கள் வசதிக்காக, லலிதா ஜுவல்லரி சார்பில், பேட்டரி பஸ் வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி கிரி வீதியில், நீதிமன்றம் உத்தரவின்படி, தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படாத நிலையில், பக்தர்கள் வின்ச் ஸ்டேஷன், ரோப்கார் ஸ்டேஷன், சுற்றுலா பஸ் ஸ்டாண்ட் செல்ல வசதியாக பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில், இலவசமாக பேட்டரி கார், பஸ்கள், 2024 மார்ச், 8, முதல் இயக்கப்பட்டு வருகின்றன.
11 பேர் அமரக்கூடிய, 18 பேட்டரி கார்கள், 14 பேர் அமரக்கூடிய பேட்டரி மினி பஸ் ஒன்று, 23 பேர் அமரக்கூடிய, 14 பேட்டரி பஸ்கள் என, 33 வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், லலிதா ஜுவல்லரி மார்ட் லிமிடெட் நிறுவனம் சார்பில், நிறுவன உரிமையாளர் கிரண் குமார், 23 பேர் அமரக்கூடிய எலக்ட்ரிக் பஸ்சை வழங்கினார். இதை, பாத விநாயகர் கோவிலில் பூஜைகள் செய்த பின் அவர் ஒப் படைத்தார்.

