UPDATED : நவ 10, 2026 10:26 PM
ADDED : நவ 10, 2026 10:24 PM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பெண்களுக்கு கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் இலவச மகளிர் அழகுக்கலை பயிற்சி அளிக்கப்படுகிறது. 19 முதல் 49 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பயிற்சியில் சேரலாம்.
8ம் வகுப்பு தேர்ச்சி கட்டாயம். நவ.,23 முதல் தினசரி வகுப்புகள் நடக்கும். பயிற்சி காலம் 35 நாட்கள். பயிற்சிக்கான உபகரணங்கள், உணவு இலவசமாக வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் ஆதார், ரேஷன், வங்கி புத்தகம், 125 நாள் வேலை திட்ட அட்டை அல்லது மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் எண், 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் சிறுமலை பிரிவு பஸ் நிறுத்தம் அருகே செயல்படும் அலுவலகத்தை நேரில் அணுகலாம். பயிற்சி நிறைவில் அனைவருக்கும் மத்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும். விவரங்களுக்கு 90802 24511, 86106 60402 என்ற அலைபேசி எண்களை அழைக்கலாம்.
