ADDED : ஏப் 03, 2026 06:27 AM
அ நிறம் | அளவு
குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை லந்தகோட்டை ஊராட்சியில் தி.மு.க., வேட்பாளர் வீரா.சாமிநாதன் தேர்தல் பிரசாரத்தை துவக்கிய நிலையில் காலை 10:00 மணிக்கு காலை உணவுக்காக புதுாரில் உள்ள தென்னந்தோப்பில் உணவு அருந்தினர்.
தென்னை மட்டையில் கூடு கட்டி இருந்த மலைத்தேனீக்கள் பிரசாரத்திற்கு வந்தவர்களை துரத்தி துரத்திக் கடித்தது. இதில் பாளையம் ராஜரத்தினம், ஜெயபால், பழனிச்சாமி உட்பட 10 பேர் மயக்கமடைந்த நிலையில் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினர்.
