தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/பீட்ரூட் விலை இருமடங்கு உயர்வு

பீட்ரூட் விலை இருமடங்கு உயர்வு

பீட்ரூட் விலை இருமடங்கு உயர்வு


UPDATED : நவ 13, 2026 07:28 PM

ADDED : நவ 13, 2026 07:28 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2026 07:28 PM ADDED : நவ 13, 2026 07:28 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் பீட்ரூட் விலை இரு மடங்காக உயர்ந்து கிலோ ரூ.25க்கு விற்பனையானது.

ஒட்டன்சத்திரம், காளாஞ்சிபட்டி, கொல்லபட்டி, பாவாயூர், கேதையுறும்பு, முத்துநாயக்கன்பட்டி, சாலைப்புதுார் சுற்றியுள்ள பகுதிகளில் பீட்ரூட் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு வரை அறுவடை மும்முரமாக நடந்ததால் பீட்ரூட் கிலோ ரூ.12க்கு விற்பனையானது.

சமீபத்திய மழை காரணமாக மகசூல் பாதிக்கப்பட்டு அறுவடையும் குறைந்தது. இதனால் மார்க்கெட்டிற்கு பீட்ரூட் வரத்தும் குறைந்தது. ஆனாலும் வியாபாரிகள் அதிகளவில் கொள்முதல் செய்ததால் விலை உயர்ந்து நேற்று பீட்ரூட் கிலோ ரூ.25க்கு விற்றது.

மழை காரணமாக பீட்ரூட் விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளதால் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us