ADDED : பிப் 14, 2025 02:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரம் பகுதியில் பீட்ரூட்டுக்கு விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், காளாஞ்சிபட்டி, பாவாயூர், காவேரியம்மாபட்டி, அத்தப்பகவுண்டனுார், பெரியகோட்டை பகுதிகளில் பீட்ரூட் அறுவடை நடந்து வருகிறது. ஜனவரி துவக்கத்தில் கிலோ ரூ.43 க்கு விற்பனையானது. வரத்து அதிகரித்ததால் நேற்று பீட்ரூட் கிலோ ரூ.5க்கு விற்றது. சிறிய, தரம் குறைந்த பீட்ரூட் இதற்கும் கீழ் விற்பனையானது.
பறிப்புக்கு ஒரு நபருக்கு ரூ. 350, பூச்சி மருந்து, பராமரிப்பு என செலவு இருக்கும் நிலையில் கிலோ ரூ.30க்கு மேல் விற்றால்தான் கட்டுபடியாகும். விலை குறைவால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர்.