ADDED : நவ 24, 2025 09:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: இலுப்பபட்டியை சேர்ந்த தொழிலாளி சுப்பிரமணி 38. இவர் நேற்று முன்தினம் பைக்கில் செந்துறைக்கு சென்று விட்டு மீண்டும் ஊர் திரும்பி மங்களப்பட்டி பிரிவு பகுதியில் வந்து கொண்டிருந்த போது எதிரே செந்துறையை சேர்ந்த சிவா 21, என்பவர் ஒட்டி வந்த பைக் மோதியது.
இதில் கீழே விழுந்த சுப்பிரமணிக்கு தலை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதே போல், புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் விவசாயி பெருமாள் 47. இவர் பைக்கில் வத்திபட்டிக்கு சென்று விட்டு மீண்டும் ஊர் திரும்பி -செக்கடிபட்டி அருகே வந்து கொண்டிருந்த போது எதிரே வலையபட்டியை சேர்ந்த வண்ணமுத்து 23 என்பவர் ஓட்டி வந்த பைக் நேருக்கு நேர் மோதியது. இதில் தடுமாறி கீழே விழுந்த பெருமாளுக்கு கை.கால், நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டது. நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.

