/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆணிகளால் மரங்களை அழிக்கும் விளம்பர பலகைகள்
/
ஆணிகளால் மரங்களை அழிக்கும் விளம்பர பலகைகள்
ADDED : ஜன 23, 2026 06:05 AM

விளம்பர பலகைகளால் விபரீதம்
திண்டுக்கல் நந்தவனம் ரோட்டில் மின்கம்பத்தில் ஆபத்து என்று தெரிந்தும் மின்கம்பம் முழுவதும் விளம்பர பலகைகளை அமைத்துள்ளனர். இதை தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டிய மின் துறை கண்டும் காணாமல் உள்ளது. அஜய், திண்டுக்கல்..........------- ஆணி அடிப்பதால் பாதிப்பு
வடமதுரை ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் மரங்களில் ஆணி அடித்து விளம்பரப் பலகைகளை தொங்க விடுகின்றனர் .மரத்தில் ஆங்காங்கே ஆணிகள் அடிப்பதால் மரம் பட்டு போக வாய்ப்புள்ளது. இதை தடுக்க வேண்டும்.முருகன், வடமதுரை...............-------சாக்கடை அடைப்பால் கழிவுநீர்
பழநி அடிவாரம் மதனபுரம் தேவஸ்தான பள்ளியின் முன்புறம் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி உள்ளது. பள்ளி மாணவர்கள் சென்று வரும் பாதை என்பதால் இதை உடனே சரி செய்ய வேண்டும். ஜின்னா, மானுார்.
...........--------
ரோடு பள்ளங்களால் விபத்து
வடமதுரை காணப்பாடி ரோட்டில் தபால் நிலைய பிரிவு அருகில் ரோடு சேதம் அடைந்து ஆங்காங்கு பள்ளங்கள் உருவாகி உள்ளது.இது போக்குவரத்துக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது . --- கந்தசாமி, சித்துார்.
.......-------- சாய்ந்துள்ள மின்கம்பங்கள்
எரியோடு திண்டுக்கல் ரோட்டில் தொட்டனம்பட்டியில் இருந்து நல்லமனார் கோட்டை செல்லும் ரோட்டில் மின்கம்பங்கள் மிக மோசமாக சாய்ந்துள்ளது. கீழே விழுவதற்கு முன் மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும்.பழனிச்சாமி, திண்டுக்கல்.
............--------
ஆமை வேக பணியால் பாதிப்பு
ஒட்டன்சத்திரம் -திண்டுக்கல் ரோடு புதுச்சத்திரம் பகுதியில் மேம்பாலம் பணி ஆமை வேகத்தில் நடப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது .இதை கருதி பணியை விரைந்து முடிக்க வேண்டும். ரங்கசாமி, கம்பளிநாயக்கன்பட்டி.
..........--------
அள்ளப்படாத குப்பை
திண்டுக்கல் உழவர் சந்தை எதிர்ப்புறம் முருகன் கோயில் அருகில் 2 மாதமாக குப்பை அள்ளப்படாமல் குவிந்துள்ளது . தினமும் தீவைத்து எரிப்பதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. இதை அகற்ற வேண்டும். கண்மணி, மகாலட்சுமி நகர் .
.............----------

