UPDATED : செப் 16, 2026 09:44 PM
ADDED : செப் 16, 2026 09:21 PM
தொப்பம்பட்டி:பழநி தொப்பம்பட்டி வாகரை பகுதியில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலையின் கீழ் செயல்படும் மக்காச்சோள ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது. இங்கு மத்திய அரசின் உயிர் உர புதுமை மற்றும் அறிவியல் முன் முயற்சி திட்டத்தின் கீழ் இயற்கை உர பயன்பாட்டை விரிவுபடுத்தும் உத்திகள் குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி நடந்தது.
அமெரிக்க நாட்டின் 'கேட்ஸ் பவுண்டேஷன்' சார்பில் செயல்படும் பஞ்சாப் மாநில 'டால்பெர்க்' ஆலோசனை குழுவினர் பங்கேற்றனர். இக்குழுவின் உயிர் உரம் சார்ந்த விஞ்ஞானிகள் விவசாயிகளுடன் கலந்துரையாடினர். உயிர் உர தொழில்நுட்பங்களை பரவலாக்கும் உத்திகள், உயிர் உர பயன்பாட்டை அதிகரித்தல், நிலையான மண் வளம், பயிர் மேலாண்மை நடைமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.
டல்பர்ட் ஆலோசனை குழுவை சேர்ந்த தேவ்கங்கிகவுல், ஸ்ரவாணி, ஆதித்ய ஆனந்த், கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலை இயக்குனர் கார்த்திகேயன், பேராசிரியர்கள் பாலச்சந்தர், சக்திவேல், இணை பேராசிரியர் ஆனந்தம், உதவி பேராசிரியர் ரகு, வாகரை மக்காச்சோள ஆராய்ச்சி நிலைய தலைவர் தங்கஹேமாவதி, இணை பேராசிரியர் ரமேஷ், துக்கையண்ணன், உதவி பேராசிரியர் சத்தியசீலா மற்றும் விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.
