ADDED : ஜன 29, 2024 06:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: கொடைக்கானல் வனக்கோட்டம் பழநி வனச்சரகத்தில் வனசரகர் கோகுல கண்ணன் தலைமையில் வனப்பணியாளர்கள் அரசு சாரா தோண்டு நிறுவனம், கல்லுாரி மாணவர்கள் இணைந்து 2024ற்கான பறவைகள் கணக்கெடுப்பு பணியை தொடங்கினர். பாலாறு அணை கலிக்கநாயக்கன்பட்டி குளம், கொத்தமங்கலம் கண்மாய் ஆகிய பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட பறவை இனங்களை பழநி பகுதிக்கு நேரடியாக கண்காணிக்கபட்டது. இப்பகுதியில் 200க்கு மேற்பட்ட பறவை இனங்கள் புகலிடமாக தங்கி உள்ளது. செங்குத கொண்டை குருவி, வெண்தொண்டை மீன் கொத்தி, கள்ளிப்புறா, வெண்கொக்கு, நீர்க்காகம், பஞ்சுருட்டன் குருவி, மாடப்புறா ஆகியவை உள்ளது.
பறவைகளை வேட்டையாடுவது, வன உயிரின பாதுகாப்புச் சட்டம் 1972ன் படி ஏழு வருடங்கள் சிறை தண்டனை வழங்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.