/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கல்வி புரவலர் பிறந்தநாள் விழா
/
கல்வி புரவலர் பிறந்தநாள் விழா
ADDED : ஜன 31, 2026 06:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் வர்த்தக சங்கத் தலைவரும், ரோட்டரி சங்க மூத்த கொடையாளருமான ஜி.சுந்தர்ராஜன் 86வது பிறந்த நாள் விழா நடந்தது. மேற்கு ரோட்டரி சங்கம் சார்பில் நடந்த பாராட்டு விழாவிற்கு தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். செயலாளர் ரங்கையா வரவேற்றார்.
ஜி.டி.என். கல்லுாரித் தலைவர் ரத்தினம், புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி தாளாளர் மரியநாதன், அரசன் ரியல் எஸ்டேட் உரிமையாளர் சண்முகம் ஆகியோர் பேசினர். விழாவில் ராஜ் ரிலாக்ஸ் உரிமையாளர் ராஜ், குழந்தை ரிலாக்ஸ் உரிமையாளர்கள் குழந்தைவேல் குமரேசன், தினேஷ்குமார், அனைத்து ரோட்டரி, லயன்ஸ் சங்க நிர்வாகிகள், அனைத்து சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

