ADDED : பிப் 28, 2026 06:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 78 வது பிறந்த நாள் பொதுக் கூட்டம் திண்டுக்கல் மேற்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில் நடந்தது. பேரவை செயலாளர் பாரதி முருகன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் சீனிவாசன் பேசினார்.
செய்தி தொடர்பாளர் கல்யாணசுந்தரம், கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாராயணசாமி, மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் ராஜ்மோகன், பகுதிச் செயலாளர்கள் சுப்பிரமணி, மோகன், ராஜன், முரளிதரன், சேசு, முகமது இக்பால், ஒன்றியச் செயலாளர்கள் ராஜசேகரன், தர்மராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணிச் செயலாளர் ராஜேஸ்கண்ணா, பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன் பங்கேற்றனர். ஜெ பேரவை மாவட்டத் துணைச் செயலாளர் பிரபு நன்றி கூறினார். மாற்றுக்கட்சியினர் சீனிவாசன் முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.

