UPDATED : நவ 29, 2026 12:08 AM
ADDED : நவ 29, 2026 12:08 AM
அ நிறம் | அளவு
கொடைக்கானல்: கொடைக் கானல் ஏரியை அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த சர்வீர் ஹென்றி லிவிஞ்ச் 1870ல் கட்டமைத்தார். இவரது பிறந்த நாள் விழாவை கொடைக்கானல் நகர மக்கள் ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர்.
207வது பிறந்த நாள் விழா முன்னாள் நகராட்சி தலைவர்கள் ஸ்ரீதர், முகமது இப்ராகீம் தலைமையில் நேற்று நடந்தது. நகராட்சி துணைத்தலைவர் மாயக்கண்ணன், ஸ்மைல் தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர்கள் அப்பாஸ், ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நகராட்சி அருகே உள்ள நினைவுத் துாணுக்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
