ADDED : ஆக 31, 2025 04:29 AM
ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மேற்கு மாவட்டம், ஒட்டன்சத்திரம் கிழக்கு ஒன்றிய பா.ஜ., சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் 11 ம் ஆண்டு சாதனை விளக்கக பொதுக்கூட்டம்,மாற்றுக் கட்சியினர் இணையும் விழா சின்னக்காம்பட்டியில் நடந்தது.
கிழக்கு ஒன்றிய தலைவர் கே.பி.சதீஷ் தலைமை வகித்தார். கிளைத் தலைவர் கே.கனிவேல் வரவேற்றார். மாவட்ட தலைவர் பி. ஜெயராமன், முன்னாள் மாவட்ட தலைவர் பழனி என்.கனகராஜ் முன்னிலையில் சின்னக்காம்பட்டி முன்னாள் அ.தி.மு.க., ஊராட்சி தலைவர் கிருஷ்ணசாமி , வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழக மாவட்ட செயலாளர் காட்டு ராஜா தலைமையில் நுாற்றுக்கு மேற்பட்ட மாற்று கட்சியினர் பா.ஜ.வில் இணைந்தனர். மாவட்ட பொதுச்செயலாளர் பி.லீலாவதி ராமதாசு, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, மண்டல தலைவர்கள், கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சக்தி கேந்திர பொறுப்பாளர் பி கோவிந்தராஜ் நன்றி கூறினார்.

