நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: பீஹாரில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நேற்று நடந்தது.
இதில் பா.ஜ., கூட்டணிக் கட்சிகள் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ.,சார்பில் பஸ் ஸ்டாண்ட் அருகே வெடி வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மாவட்டத்தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். நிர்வாகிகள், மகளிர் அணியினர் கலந்துக்கொண்டனர்.

