ADDED : நவ 27, 2024 04:39 AM
அ நிறம் | அளவு
சின்னாளபட்டி, : ஆத்துார் வடக்கு ஒன்றிய பகுதியில் பா.ஜ., சார்பில் கிளை வாரியாக நிர்வாகிகள் தேர்வு நடக்கிறது. பித்தளைப்பட்டியில் நடந்த தேர்வில் மாவட்ட தலைவர் தனபாலன் தேர்தல் பார்வையாளராக பங்கேற்றார். சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலுார் இப்ராஹிம் ஆலோசனை வழங்கினார்.
ஒன்றிய தலைவர் ராமமூர்த்தி, தேர்தல் பொறுப்பாளர் வினோதினி, வடக்கு ஒன்றிய பார்வையாளர் லட்சுமணன் மணிகண்டன், முன்னிலை வகித்தனர். செயலாளர் சாந்தகுமார், துணைத் தலைவர்கள் சரவணன், மணிகண்டன் ஓ.பி.சி., மாவட்ட செயலாளர் ராம்குமார், கிளை தலைவர் அமுல் ராஜ் பங்கேற்றனர்.
