UPDATED : அக் 21, 2026 11:37 PM
ADDED : அக் 21, 2026 10:30 PM

திண்டுக்கல்: திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ., சார்பில் போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் இன்று நடந்தது.
மாவட்டத் தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். பா.ஜ., சிறுபான்மைப் பிரிவின் தேசியச் செயலாளர் வேலுார் இப்ராஹிம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மாநிலச் செயலாளர் கதிர்நரசிங்கபெருமாள், தேசிய பொதுக்குழு உறுப்பினர் பழனிவேல்சாமி, மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் முன்னிலை வகித்தனர்.
திண்டுக்கல் கலெக்டர் முகாம் அலுவலகம் முன் துவங்கிய ஊர்வலம் எம்.ஜி.ஆர்., சிலை, காமராஜர் சிலை, பெரியார் சிலை ரவுண்டானா, மாநகராட்சி ரோடு வழியாக மணிக்கூண்டை வந்து நிறைவடைந்தது.
ஏற்பாடுகளை சிறுபான்மைப் பிரிவு அணி தலைவர் மரிய பிரான்சிஸ் சேவியர், பட்டியல் அணி பிரிவு தலைவர் ரகுராமச்சந்திரன், மகிளரணி பிரிவு தலைவர் முருகேஸ்வரி, விவசாய அணி பிரிவு தலைவர் ரவி, இளைஞரணி பிரிவு தலைவர் அன்பு ஹரிஹரன் ஆகியோர் செய்திருந்தனர். ஊர்வலத்தில் மாநில, மாவட்ட, மண்டல, அணிப்பிரிவு நிர்வாகிகள் பங்கேற்றனர்.
