/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பா.ஜ., வழக்கறிஞர் பிரிவு ஆர்ப்பாட்டம்
/
பா.ஜ., வழக்கறிஞர் பிரிவு ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 13, 2025 05:55 AM

திண்டுக்கல்: பா.ஜ., வழக்கறிஞர் பிரிவு அணி சார்பில் மதுரை திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றுவதற்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டதை நடைமுறைப்படுத்தாத தமிழக அரசை கண்டித்தும், நீதிபதி உத்தரவை தமிழக அரசு மதிக்க வேண்டும் என வலியுறுத்தி திண்டுக்கல் பா.ஜ., வழக்கறிஞர்கள் பிரிவு சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் ராஜா தலைமை வகித்தார். துணைத் தலைவர் கண்ணன், அகில பாரத வழக்கறிஞர் சங்க மாநில துணைத்தலைவர் வேல்முருகன், ஆர்.எஸ்.எஸ்., வழக்கறிஞர் சதீஸ்குமார், மாவட்ட செயலாளர் லட்சுமணன் முன்னிலை வகித்தனர்.பா.ஜ., கிழக்கு மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். மாவட்ட துணைத்தலைவர் சபாபதி, பொதுசெயலாளர்கள் முத்துக்குமார், சந்திரசேகர் கலந்து கொண்டனர்.

