/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பட்ஜெட்டால் ஆட்சிக்கு வந்த பா.ஜ., அமைச்சர் பெரியசாமி பேச்சு
/
பட்ஜெட்டால் ஆட்சிக்கு வந்த பா.ஜ., அமைச்சர் பெரியசாமி பேச்சு
பட்ஜெட்டால் ஆட்சிக்கு வந்த பா.ஜ., அமைச்சர் பெரியசாமி பேச்சு
பட்ஜெட்டால் ஆட்சிக்கு வந்த பா.ஜ., அமைச்சர் பெரியசாமி பேச்சு
ADDED : பிப் 11, 2025 05:40 AM

நிலக்கோட்டை: ''பட்ஜெட்டில் டில்லிக்கு ஏராளமான நலத்திட்டங்களை வழங்கியதன் எதிரொலியாக பா.ஜ., ஆட்சியைப் பிடித்திருப்பதாக'' ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி பேசினார்.
நிலக்கோட்டையில் கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசை கண்டிக்கிறோம். பீகார், ஆந்திர மாநில கூட்டணி கட்சிகளை வைத்து ஆட்சியைப் பிடித்திருக்கிறார்கள். அந்த வயிற்றெரிச்சலில் 40 இடங்களிலும் வென்ற தி.மு.க.,வை வஞ்சிக்க நிதி ஒதுக்கீடு செய்யாது அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக நடக்கிறது. பட்ஜெட்டில் டில்லிக்கு ஏராளமான நலத்திட்டங்களை வழங்கியதன் எதிரொலி தான் 27 ஆண்டுகளுக்குப் பிறகு டில்லியில் பா.ஜ., ஆட்சியைப் பிடித்திருப்பது.
மாநில உரிமையை பாதுகாக்க பா.ஜ., அரசை எதிர்த்து போராடுவோம் என்றார்.
கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் மணிகண்டன் வரவேற்றார்.
மாவட்ட துணைச் செயலாளர் நாகராஜன், ஒன்றிய செயலாளர்கள் சவுந்தர பாண்டியன், கரிகால பாண்டியன், கனிக்குமார், முருகன், பேரூராட்சி தலைவர் சுபாஷினி பிரியா கதிரேசன் பங்கேற்றனர். நகர செயலாளர் ஜோசப் கோவில் பிள்ளை நன்றி கூறினார்.

