/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பா.ஜ., தொழில் வல்லுனர் பிரிவு கூட்டம்
/
பா.ஜ., தொழில் வல்லுனர் பிரிவு கூட்டம்
ADDED : நவ 14, 2025 04:52 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ., கட்சி அலுவலகத்தில் தொழில் வல்லுனர்கள் பிரிவு சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில தலைவர் சுந்தர்ராமன் கலந்துகொண்டார்.
அவர் கூறியதாவது: ஜி.எஸ்.டி. மறுசீராய்வு குறித்து கையேடு வெளியிடப்பட்டது. 4 பிரிவுகளாக இருந்ததை மக்களின் நலன் கருதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2 பிரிவுகளாக மறுசீராய்வு செய்து வெளியிட்டார். இதன் மூலம் நாடு முழுவதும் பெரிய நிறுவனங்களில் விற்பனை அதிக அளவில் நடக்கிறது. உலக அளவில் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. ஜி.எஸ்.டி. மறுசீராய்வு காரணமாக விரைவில் 3-ம் இடத்தை பெற்றுவிடும்.அதற்காக தமிழகம் முழுவதும் உள்ள பா.ஜ., தொழில் வல்லுனர் பிரிவுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி ஜி.எஸ்.டி. மறுசீராய்வு குறித்து விளக்கம் அளித்து வருகிறோம். ஜி.எஸ்.டி. மறுசீராய்வுக்கு பிறகும் விற்பனை விலையை குறைக்காத நிறுவனங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசுக்கு வலியுறுத்துவோம் என்றார்.
பா.ஜ., கிழக்கு மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம், தொழில் வல்லுனர்கள் பிரிவு மாநில செயலாளர்கள் உமா நாச்சியார், மகாலட்சுமி, மதுரை கோட்ட பொறுப்பாளர் ராமசேகர், தொழில் வல்லுனர் பிரிவு மாவட்ட தலைவர் அழகுமலை பங்கேற்றனர்.

