ADDED : மார் 27, 2026 06:58 PM

அ நிறம் | அளவு
பழநி: தே.ஜ., கூட்டணியில் பழநி தொகுதி அ.தி.மு.க.,வுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழநி பா.ஜ., அலுவலகம் முன்பு கட்சியினர் தேங்காய் உடைத்து போராட்டம் செய்தனர்.
நகர இளைஞரணி துணைத் தலைவர் சதீஷ்குமார் கட்சி கட்டட உச்சியில் கொடியுடன் ஏறி போராட்டம் செய்ய போலீசார் இறக்கி விட்டனர். மாவட்ட பொதுச் செயலாளர் செந்தில்குமார், மாவட்ட துணைத்தலைவர் ரஞ்சிதம், நகரத் தலைவர் ஆனந்த்குமார், நகரச் செயலாளர் கருப்புசாமி, இளைஞரணி மாவட்ட பொதுச் செயலாளர் முருகானந்தம் கலந்து கொண்டனர்.
