UPDATED : அக் 12, 2026 08:59 PM
ADDED : அக் 12, 2026 08:56 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே பா.ஜ., கிழக்கு மாவட்டம் சார்பில் பாலியல் வழக்கில் ஜவஹர்லால் நேரு பல்கலையின் பேராசிரியரும், லோக்சபா எம்.பி.,யுமான அங்கோம்ச்சா பிமோல் அகோய் ஜாமை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். துணைத்தலைவர் கண்ணன், பொதுச்செயலாளர்கள் முத்துக்குமார், ஆனந்தி முன்னிலை வகித்தனர். தேசிய செயற்குழு உறுப்பினர் பழநிவேல்சாமி கண்டன உரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் போஸ், மாநகர மண்டல தலைவர்கள் ராம்கண்ணன், சுந்தரி, பொன்முருகேசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
