ADDED : பிப் 09, 2025 05:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: டெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ., சார்பாக பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.
பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்த இதற்கு மாவட்டத் தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்டத் தலைவர் தனபாலன் முன்னிலை வகித்தார். பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். பா.ஜ., முன்னாள் நிர்வாகிகள் கோவிந்தராஜ், மல்லிகா, செந்தாமரை, மணிகண்டன், முத்துக்குமரன், வேல்முருகன், ஆனந்தி, சபாபதி, மாவட்ட அணி ,பிரிவு தலைவர்கள், நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

