/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாவட்டத்தில் பா.ஜ., பயிலரங்கம்
/
மாவட்டத்தில் பா.ஜ., பயிலரங்கம்
ADDED : டிச 16, 2025 07:47 AM

பழநி: மாவட்டத்தில் பழநி, ஆத்துார், வேடசந்துார் சட்டசபை தொகுதிகளில் பா.ஜ., சார்பில் பூத் கமிட்டி மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பயிலரங்கம் நடந்தது.
பழநியில் மாநில செயற்குழு உறுப்பினர், தொகுதி அமைப்பாளர் கனகராஜ் தலைமையில் நடைபெற்றது.
முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், கேரள மாநில பொதுச் செயலாளர் சோபா, தேசிய பொதுக்குழு உறுப்பினர் மகாராஜன், மதுரை கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் கோவிந்த மூர்த்தி, மாவட்ட தலைவர் ஜெயராமன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் திருமலைசாமி, சட்டசபை பொறுப்பாளர் பழனிச்சாமி, நகரத் தலைவர் ஆனந்தகுமார் மற்றும் பி.எல்.ஓ.,க்கள் கலந்து கொண்டனர்.
செம்பட்டி: ஆத்தூர் தொகுதியில் நடந்த பயிலரங்கத்திற்கு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். தொகுதி அமைப்பாளர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார்.
நிர்வாகிகள் ராமசேகர், ராஜரத்தினம் ஆகியோர் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான ஆலோசனைகளை வழங்கினர். தொகுதி இணை அமைப்பாளர் தண்டபாணி, லட்சுமண மணிகண்டன், அயனவேல் உள்ளிட்டோர் பேசினர். ஆத்தூர் தெற்கு மண்டல தலைவர் பெரியமுத்து நன்றி கூறினார்.
வேடசந்துார்: எரியோட்டில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் கண்ணன் வரவேற்றார்.
தேர்தலுக்காக செய்ய வேண்டிய பணிகள் குறித்து மதுரை கிழக்கு மாவட்ட துணைத்தலைவர் பெருமாள், மாநில செயலாளர் கதலி நரசிங்க பெருமாள், தொகுதி பொறுப்பாளர் கருப்புசாமி விளக்கினர். கிழக்கு ஒன்றிய தலைவர் முத்துசெல்வி நன்றி கூறினார்.

